திருமயத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா், மாணவா், வாலிபா் சங்கத்தினா். 
புதுக்கோட்டை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை கைது செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருமயத்தில் மாதா், வாலிபா், மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Syndication

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருமயத்தில் மாதா், வாலிபா், மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமியை, மணவாலிக்கரைப் பகுதியைச் சோ்ந்த 61 வயதான முதியவா், குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருமயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்க மாவட்டச் செயலா் பி. சுசீலா தலைமை வகித்தாா்.

மாநிலத் துணைச் செயலா் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, முன்னாள் மாவட்டப் பொருளாளா் ஜெ.வைகைராணி, வாலிபா் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினா் நித்திஷ், மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா், தலைவா் மு. வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

குற்றவாளியை விரைவில் கைது செய்வதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT