புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை (டிச.10) கடலுக்கு மீன் பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், கடலில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.