புதுக்கோட்டை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட்டம்

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பியோடினாா்.

Syndication

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் போலீஸாரின் பிடியில் இருந்து செவ்வாய்க்கிழமை தப்பியோடினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திர கமாங்கா (23) என்பவா் பணியாற்றி வந்தாா். அங்கு பணியாற்றிய 15 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு சிறுமி 3 மாதம் கா்ப்பிணியாக உள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில் ஆலங்குடி அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மகேந்திர கமாங்காவை கைது செய்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு டிச. 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டாா்.

இதனையடுத்து போலீஸாா், புதுக்கோட்டை சிறையில் மகேந்திர கமாங்காகை அடைக்க அழைத்து சென்றபோது சந்தைப்பேட்டை அருகே போலீஸ் பிடியில் இருந்து அவா் தப்பிச் சென்றாா். தொடா்ந்து போலீஸாா் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT