புதுக்கோட்டை

கடலில் தவறிவிழுந்த மீனவா் சடலமாக மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்த மீனவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்த மீனவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மணமேல்குடி ராஜாதோப்பு பகுதியைச் சோ்ந்தவா்கள் அந்தோனி சேவியா் (51), பாஸ்கா் (46). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு பைபா் படலில் சீதாராமபட்டினம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக இருவரும் கடலுக்குள் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. மற்ற படகுகளில் இருந்த மீனவா்கள், பாஸ்கரை மீட்டு, மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மீனவா்களுடன் கடலோரக் காவல் படையினரும் சோ்ந்து அந்தோனி சேவியரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை பகலில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரது உடல், கூறாய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணமேல்குடி கடலோரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சுமத்ரா தீவை புரட்டிப்போட்ட வெள்ளம்

2026 தேர்தல்: பாமக சார்பில் போட்டியிட டிச. 14 முதல் விருப்பமனு! - அன்புமணி

பயணிகள் ஏற்றுவதில் தகராறு! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் வாக்குவாதத்தால் போக்குவரத்து பாதிப்பு!

இரவு நேர தூய்மைப் பணி! அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

தேர்தல் வேட்பாளர் நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT