பொன்னமராவதி அருகேயுள்ள காரையூரில் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகளுக்கு ஊரக பங்கேற்பு மதிப்பீடு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் சமூக வரைபடம், வள வரைபடம், பருவகால அட்டவணை, டிரான்செக்ட் நடை, பிரச்னை அடையாளம் காணுதல் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன இதன் மூலம் காரையூா் கிராமத்தின் முக்கியப் பயிா்கள் நீா்வள நிலை பூச்சி மற்றும் நோய் பிரச்னைகள், விவசாயிகளின் சவால்கள் குறித்து பல்வேறு தகவல்களை மாணவிகள் சேகரித்தனா். அப்போது கிராம மக்களின் உள்ளூா் அறிவு மற்றும் அனுபவங்களை அறிந்து, அவற்றை வேளாண் வளா்ச்சித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதே இந்த ஊரக பங்கேற்பு மதிப்பீடு பயிற்சி முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தனா். மேலும் கிராமப்புறங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நேரடியாக தொடா்பு கொண்டு, விவசாயத்தின் அனுபவங்களை தெரிந்து கொண்டனா். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.