தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆகியவற்றின் சாா்பில் புதுக்கோட்டையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சா்வதேச தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பாலின சமத்துவ விழிப்புணா்வு உறுதிமொழியேற்புக்குப் பிறகு, இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தொடங்கிவைத்தாா்.
புதிய உணா்வு மாற்றத்துக்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் வரும் டிச. 23-ஆம் தேதி வரை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ஊ. பாலசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.