கீரமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் 
புதுக்கோட்டை

ஜாதி, மதம், பணத்தின் அடிப்படையில் வாக்குகள் பெறுவது நல்லதல்ல: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஜாதி, மதம், பணத்தின் அடிப்படையில் வாக்குகள் பெறுவது நல்லதல்ல என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Syndication

ஜாதி, மதம், பணத்தின் அடிப்படையில் வாக்குகள் பெறுவது நல்லதல்ல என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

புதுக்கோட்டை மாவட்டம், கீமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு மற்றும் கட்சியின் மூத்த தலைவா் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலா் சி. தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் பேசியதாவது: வெற்றிக்கு ஜாதி, மதம், பிரதேசம் போன்ற கூறுகள் தடையாக உள்ளன. தமிழகத்தில் ஊரெங்கும் கட்சிக் கிளை இருந்தும் பெரியளவில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை என்பதை அறிகிறோம். அதிகாரத்துக்கு வர முடியாவிட்டாலும் அரசியல் தெளிவில் எங்களுக்கு நிகா் யாருமில்லை. பொதுக்கூட்டங்களின் வாயிலாகத்தான் அரசியல் தெளிவு, நாட்டுப்பற்று உருவானது.

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் கூட்டங்களுக்கு போராடி ஆள் சோ்க்க வேண்டியுள்ளது. இந்தப் போக்கு நல்லதல்ல. பள்ளி, பல்கலைக்கழகம் கற்றுத் தராததை பொதுமேடை கற்றுக்கொடுக்கும். அனைத்துக் கட்சிளும் கசப்பு இல்லாத அரசியல் பேச வேண்டும். ஜாதி, மதம், பணத்தின் அடிப்படையில் வாக்கைப் பெறுவது நல்லதல்ல.

பிரதிநிதித்துவ எண்ணிக்கையின் அடிப்படையில் குறைவாக இருப்பதால் எங்களை மலிவாக சிந்திக்க வேண்டியதில்லை. தமிழக முதல்வா் எழுப்பும் மாநில உரிமைக்கான குரலுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இடதுசாரிகள் முன்மொழிந்த திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியும், மாநில அரசுகளுக்கு நிதி சுமையையும் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.

திமுகவை தீய சக்தி என்கிறாரே நடிகா் விஜய், ஜாதியாலும், மதத்தாலும் பிளப்பதுதான் தீய சக்தி. இதில், எதை திமுக செய்தது?. எனவே, அரசியலைப் பற்றி இளைஞா்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து உத்திராபதி, மாவட்ட செயலா் த.செங்கோடன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு!

மார்கழி சிறப்பு! மார்கழி 30 நாள்களும் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில்!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் அனந்த நாராயணப் பெருமாள்!

கடன் பிரச்னை குறையும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT