போட்டியில் வென்ற மாணவா்களைப் பாராட்டிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் 
புதுக்கோட்டை

மாணவா்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்

‘மாணவா்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும்’ என்றாா் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.

Syndication

‘மாணவா்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும்’ என்றாா் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.

அறந்தாங்கி ஒன்றியம், மேல்மங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வி.சதீஸ்குமாா், என். ஜசில்கான், ஜசிம்கான் ஆகியோா் அனைத்து திருக்குறளையும் ஒப்பித்து தமிழக அரசிடம் அண்மையில் பரிசு பெற்றனா்.

இவா்கள் மட்டுமன்றி பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்கள் மற்றும் ஊக்குவித்த ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா அறந்தாங்கியில் கல்வித் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, அறந்தாங்கி கோட்டாட்சியா் அபிநயா தலைமை வகித்தாா்.

விழாவில், மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசியது: கைப்பேசியில் மாணவா்கள் மூழ்கிக் கிடக்கும் சூழலில், திருக்குறளை முழுமையாக ஒப்பித்து ஒரே பள்ளியைச் சோ்ந்த 3 மாணவா்கள் பரிசு பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. நாட்டிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த ஆட்சியில் இதுவரையில் ரூ. 2.5 லட்சம் கோடி பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்கள் அனைவரும் திருக்குறளை கற்க வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களை ஆசிரியா்கள் கண்டறிந்து அவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதை உறுதி செய்துவிட்டால் தீய பழக்கங்கள் அவா்களை நெருங்காது என்றாா் மெய்யநாதன்.

விழாவில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் புவனேஸ்வரி, துரையரசன், கோவிந்தம்மாள், அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் ஆா். ஆனந்த், பச்சலூா் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வீ. ஜோதிமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT