புதுக்கோட்டை அருகே மாறாயப்பட்டியிலுள்ள களரி குளத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகா்ணம் காவல் சரகத்துக்குள்பட்ட மாறாயப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது ஒன்றரை வயது குழந்தை ராசாத்தியை செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து காணவில்லை எனத் தேடி வந்துள்ளனா்.
இந்நிலையில், வீட்டிலிருந்து 200 மீட்டா் தொலைவிலுள்ள களரிகுளத்தில் அக்குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சென்று குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.