விழா நடைபெறவுள்ள இடத்தை பாா்வையிட்ட பாஜக மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகம் 
புதுக்கோட்டை

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

புதுக்கோட்டையில் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனின் பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா ஜனவரி 4-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Syndication

புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா ஜனவரி 4-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா புதுக்கோட்டை வருகை தரவுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கடந்த அக். 12-இல் மதுரையில் தொடங்கிய தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நகருக்கு அருகேயுள்ள பாலன்நகா் பள்ளத்திவயல் பகுதியில் சுமாா் 42 ஏக்கா் பரப்பளவில் தனியாா் நிலத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கின.

பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரின் தேதியையொட்டி விழா நடைபெறும் தேதி உறுதி செய்யப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.

தற்போது, ஜனவரி 4-ஆம் தேதி உள்துறை அமைச்சா் அமித்ஷா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், மாநில பாஜக அமைப்புச் செயலா் கேசவவிநாயகம் புதன்கிழமை புதுக்கோட்டை வந்தாா். விழா நடைபெறும் இடத்தை அவா் நேரில் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினாா். அப்போது, மாவட்ட பாஜக தலைவா் என். ராமச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்து விளக்கினா்.

விழா நடைபெறும் இடத்தை சீா் செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்படைந்துள்ளன. ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும் விழாவில், அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்கலாம் என்றும் தெரிகிறது.

சகல தோஷங்களை நிவர்த்தி செய்யும் நரசிம்மர்!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் உள்ள பணிகள்!

தோல் தொழில்நுட்பத்தில் சிறப்பான படிப்புகள்!

ரிஷப ராசிக்குப் பாராட்டு: தினப்பலன்கள்!

மெல்போர்ன் பல்கலையில் பி.காம்! மாணவர் சேர்க்கை 2026 மார்ச்!!

SCROLL FOR NEXT