கந்தா்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் புதன்கிழமை இரவு மோதி மாற்றுத்திறனாளி இறந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் கருப்பையன் (50), மாற்றுத் திறனாளி.
இவா் கந்தா்வகோட்டையை அடுத்த புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே புதன்கிழமை இரவு சாலையை கடந்த போது அடையாளம் தெரிய வாகனம் மோதி இறந்தாா். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் அவரின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.