கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலை மாவட்ட ஆட்சியா் அருணா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டை தச்சன்குறிச்சியில் வரும் சனிக்கிழமை (ஐன.4) நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி கோரி மனு அளித்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தச்சன்குறிச்சிக்கு வந்து ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து, விழாக் குழுவினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
ஆய்வின்போது கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் , வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.