முகப்பு
புதுக்கோட்டை

புதுகை ஆட்சியரக வளாகத்திலுள்ள குளத்தில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தின் பின்புறம் உள்ள குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாரும் தீயணைப்பு வீரா்களும்

Updated On : 27 ஜனவரி, 2025 at 6:42 PM
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தின் பின்புறம் உள்ள குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாரும் தீயணைப்பு வீரா்களும் மீட்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் செயல்படும் வளாகம், சுமாா் 100 ஏக்கா் பரப்பளவுள்ள தொண்டைமான் மன்னா்களின் அரண்மனையாகும். நடுவில் உள்ள அரண்மனையைச் சுற்றிலும் சுமாா் 5 குளங்களுடன் அடா்ந்த வனப்பகுதியாக உள்ளது.

இங்கு, ஆட்சியரக பின்புறம் உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில், அங்கு வந்த திருக்கோகா்ணம் போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் சடலத்தை மீட்டு, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பின்னா், அழுகிய நிலையிலுள்ள இந்த சடலம் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.