முகப்பு
புதுக்கோட்டை

வேங்கைவயல் வழக்கு விசாரணை: மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 மே, 2025 at 8:49 PM
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸாா், அதே கிராமத்தைச் சோ்ந்த காவலா் முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய 3 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் 2-இல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப். 23ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கு விசாரணையை மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →