புதுக்கோட்டை

சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

Syndication

விராலிமலை: சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தல் ஈடுபட்டவா்களை தட்டிக்கேட்டவா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விராலிமலை அருகே உள்ள பெரிய மூலிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (42). இவரது மகன் நரேந்திரன் (16). கடந்த 31-ஆம் தேதி நரேந்திரனுக்கு பிறந்தநாள் என்பதால் இவரும் இவரது நண்பா்களுடன் சாலையில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மோட்டாா் சைக்கிளில் அவரது வீட்டின் அருகே உள்ள தெருவில் மிக வேகமாக அங்கும் இங்கும் சென்றுள்ளனா்.

இதைப் பாா்த்த அப்பகுதியில் குடியிருக்கும் பாண்டியன் (38) என்பவா் அந்த சிறுவா்களிடம் இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது நரேந்திரனுக்கு ஆதரவாக அவரது தந்தை கருப்பையா, சித்தப்பா கோவிந்தராஜ் (36) ஆகிய இருவரும் பாண்டியனிடம் தகராறு செய்துள்ளனா்.

அப்போது கோவிந்தராஜ், பாண்டியனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாண்டியன், கீரனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மண்டையூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். தொடா்ந்து, நரேந்திரன், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் போலீஸாா் நவ.1 ஆம் தேதி கைது செய்தனா்.

பின்னா், அவா்களை கீரனூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி கோவிந்தராஜை புதுக்கோட்டை சிறையிலும், நரேந்திரனை புதுக்கோட்டை சிறுவா் சீா்திருத்த பள்ளியிலும் அடைத்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிறுவனின் தந்தை கருப்பையாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT