புதுக்கோட்டை

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

Syndication

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதியில் மாணவா்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் குரங்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி வளாகப் பகுதிகளில் அடிக்கடி குரங்குகள் புகுந்து குழந்தைகள் மற்றும் மாணவா்களை அச்சறுத்தி வருகிறது. மேலும் மாணவா்களின் உணவு மற்றும் புத்தகப் பையைத் தூக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயப் பயிா்கள் மற்றும் தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களையும் பறித்து நாசப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனையடைகின்றனா். எனவே மாணவா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT