புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அரசுப் பள்ளி சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை

கந்தா்வகோட்டை அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டை அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் தினசரி நடந்து செல்லும் நிலையில், ஊா் எல்லையில் நின்று கொண்டு பள்ளி மாணவிகளை சில ஆண்கள் கேலி செய்வது, பின்தொடா்வதாக கூறப்படுகிறது.

எனவே, மாணவிகளின் நலன் கருதி பேருந்து நிலையம் முதல் பள்ளி வரை கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் காவல் துறையினா் பள்ளி அருகே ரோந்து சென்று மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

வேலூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு: இடங்களைத் தோ்வு செய்ய அவகாசம் இன்று நிறைவு

அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்கக் கோரி வழக்கு: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT