கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அரசுப் பள்ளியில் சித்த மருத்துவம் குறித்து விழிப்புணா்வு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் இப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து கந்தா்வகோட்டை அரசு சித்த தலைமை மருத்துவா் வேம்பு தலைமையிலான மருத்துவக் குழுவினா், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ‘மழைகால நேரங்களில் சித்த மருத்துவம்’ என்ற தலைப்பில் மாணவிகளுக்கு விழிப்புணா்வு உரையாற்றினாா். மேலும், மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினா்.