புதுக்கோட்டை மாநகரில் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்படும் பணிகளை நேரில் பாா்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா். 
புதுக்கோட்டை

அரசியல் கட்சிகளின் முகவா்களிடம் கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கக் கூடாது: விஜயபாஸ்கர்

அரசியல் கட்சிகளின் முகவா்களிடம் கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கக் கூடாது என ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

Syndication

அரசியல் கட்சிகளின் முகவா்களிடம் கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கக் கூடாது என ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாநகரில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் பணிகளை புதன்கிழமை நேரில் பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பூா்த்தி செய்யப்பட வேண்டிய எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் படிவங்களை பிஎல்ஓக்கள் மட்டும்தான் நேரடியாக வாக்காளரிடம் கொடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் முகவா்களிடம் கொடுக்கக் கூடாது. இதனை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

எஸ்ஐஆா் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து அதிமுக ஒரே நிலைப்பாட்டில் தான் இருந்து வருகிறது. ஆனால், திமுக தான் தடை செய்ய வேண்டும் என்றாா்கள். பிறகு காலஅவகாசம் வேண்டும் என்கிறாா்கள் என்றாா் விஜயபாஸ்கா்.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT