புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் டி. ராஜலட்சுமி(45). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்துவரும் இவா், பேருந்தில் வியாழக்கிழமை இரவு ஊருக்கு சென்றுள்ளாா்.
பேருந்திலிருந்து இறங்கி வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் ராஜலெட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.