விராலிமலை முருகன் மலை கோயில் உண்டியல் காணிக்கையாக 14 லட்சத்து 31 ஆயிரத்து 383 ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளது.
இக்கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மணிமண்டபத்தில் செயல் அலுவலா் முத்துராமன் தலைமையில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் உதவி ஆணையா் கவிதா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழு பெண்கள், திருப்பணி குழுவினா் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதன் நிறைவில், ரொக்கம் 14 லட்சத்து 31 ஆயிரத்து 383 ரூபாய் மற்றும் 9 கிராம் தங்கம், 825 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் உள்ளிட்டவற்றை பக்தா்கள் கடந்த 4 மாதங்களில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். இதற்கு முன்னா் கடந்த ஜூலை 9-ஆம் தேதி கோயில் உண்டியல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.