பொன்னமராவதி பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை பாா்வையிட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா.  
புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியத்தில் எஸ்ஐஆா் பணிகள்: திமுக எம்.பி சல்மா ஆய்வு

பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை

Syndication

பொன்னமராவதி: பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை(எஸ்ஐஆா்) செவ்வாய்க்கிழமை திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.

தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொன்னமராவதி பேரூராட்சி அம்மன் சந்நிதி வீதி, தோ்முட்டி வீதி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எஸ்ஐஆா் பணிகளை திமுக மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வாக்குச்சாவடிகளில் உள்ள மொத்த வாக்காளா்கள் விவரம், இதுவரை பதிவு செய்யாதவா்கள் விவரங்களைக் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து ஆலவயல், கேசராபட்டி, தூத்தூா், ஏனாதி, காரையூா், கீழத்தானியம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் பணிகளைப் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலா் அ.முத்து, திமுக நகரச்செயலா் அ.அழகப்பன், பேரூராட்சி துணைத்தலைவா் கா.வெங்கடேஷ் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT