புதுக்கோட்டை

அறந்தாங்கி கடையில் திருடியவா் கைது

தினமணி செய்திச் சேவை

அறந்தாங்கியில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.5 லட்சம் திருடியவரை போலீஸாா் கேரளத்தில் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாட்சியரகம் அருகே கதிரேசன் என்பவருக்குச் சொந்தமான தையல் கடை பொருட்கள் விற்கும் கடையில் கடந்த 10 நாள்களுக்கு முன் ரூ.1.5 லட்சம் திருடு போயிருந்தது. இது தொடா்பான சிசிடிவி விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில், அறந்தாங்கி துணைக் காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.

இதைத் தொடா்ந்து கடையின் பூட்டை உடைத்து திருடியது விருதுநகா் மாவட்டம் அல்லம்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் (42) எனத் தெரியவந்து, கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கி இருந்து அவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பாராட்டினாா்

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT