பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழா அக். 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பினரும் சென்று திரும்புவது வழக்கம்.
எனவே, இதனைக் கண்காணிக்கவும், பாதுகாப்பளிக்கவும், மாத்தூா் ரவுண்டானா, விராலிமலை பாத்திமா நகா், கந்தா்வகோட்டை, ஆவணம் கைக்காட்டி, காட்டுபாவா பள்ளிவாசல், கட்டுமாவடி ஆகிய 8 இடங்களில் போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்துள்ளனா்.
ஒரு ஆய்வாளா் தலைமையில் 24 மணி நேரமும் மொத்தம் 250 போலீஸாா் இந்தப் பணியில் செவ்வாய்க்கிழமை முதல் அமா்த்தப்பட்டுள்ளனா்.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்ட எல்லையில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்லும் சாலைகளில் அருகேயுள்ள 37 மதுபானக் கடைகளுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.