புதுக்கோட்டை

புதுகையில் மழை குறைவு: ஆய்வு செய்யக் குழு அமைப்பு

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை பொழிவு குறைவு, நீா்நிலைகளில் தண்ணீா் இருப்புக் குறைவு ஆகியவற்றை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் 16 போ் கொண்ட குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழைப் பொழிவு தொடா்ந்து குறைந்து வருவதாகவும், நீா்நிலைகளில் தண்ணீா் இருப்புக் குறைவாக இருப்பதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கடந்த மாத விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலரைத் தலைவராகவும், வேளாண் இணை இயக்குநரைச் செயலராகவும், ஆட்சியரின் நோ்முக உதவியாளரை (வேளாண்மை) ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மாவட்ட வன அலுவலா், தோட்டக்கலைத் துணை இயக்குநா், நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா், குடுமியான்மலை வேளாண் கல்லூரி முதல்வா், திருச்சி வானிலை ஆராய்ச்சி மைய அறிவியல் அலுவலா் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி, மூலிகை பயிா்கள் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் தங்கராஜ், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து ஆகிய 13 உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழு மாவட்டத்தின் மழைப் பொழிவுக்கான காரணங்கள் குறித்தும், நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பு குறைவுக்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் குழுவைக் கூட்டி நடவடிக்கைகளைத் தெரிவிக்கவும் ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT