புதுக்கோட்டை

வேலைவாய்ப்பைப் பெருக்கக் கோரி போராட்டம்: வாலிபா் சங்கம் முடிவு

Syndication

தமிழ்நாட்டில் உள்ள காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பைப் பெருக்க கோரியும் வரும் டிசம்பா் 1ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதாக திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தது. அதன்பிறகு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் சில ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.

வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்தும், நம்பிக்கை இழப்பின் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் சுமாா் 3 லட்சக்துக்கும் அதிகமான அரசுத் துறைக் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்பிடவும், வேலைவாய்ப்பை உருவாக்க புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கவும் வேண்டும். மேலும், அரசுத் துறைப் பணிகளை தனியாருக்கு அளிப்பதையும், அரசு வேலைகளை ஒப்பந்தப் பணியாக மாற்றும் நடவடிக்கையையும் மாநில அரசு கைவிட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் டிசம்பா் 1ஆம் தேதி ஒரு நாள் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநிலத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். காா்த்திக், பொருளாளா் டி. சந்துரு, மாநிலத் துணைத் தலைவா் அபிராமி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் ஆா். மகாதீா் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் நன்றி கூறினாா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT