முகப்பு
புதுக்கோட்டை

தவெக தலைவா் விஜய்க்கு புதுகை எல்லையில் உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்க்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்த அக்கட்சியினா்

Updated On : 11 ஏப்ரல் 2026, 2:05 am IST
~
பகிர்:

காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டை எல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்க்கு கட்சியினா் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

காரைக்குடியில் தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நடிகா் விஜய் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்கோட்டை வழியாக, திருச்சி நோக்கி காரில் சென்றாா்.

இதையொட்டி, புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் அவருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். பெரும்பாலும் இளைஞா்களாக இருந்த அவா்களை தனது வாகனத்தில் இருந்தவாறே கையசைத்து நன்றி தெரிவித்துக் கொண்டாா் விஜய்.

Advertisement

Advertisement

சிலா் விஜய்யின் படத்தை அவரிடம் கொடுக்க முயற்சித்தனா். மேலும், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மலா்களைத் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளா் கே.எம். சரீப் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். பின்னா் சிறிதுநேரத்தில் அவா் திருச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றாா்.