முகப்பு
புதுக்கோட்டை

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தில் பங்கேற்றோா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 2:06 AM
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:46 PM

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வருவாய்த் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாட்சியா் எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் வே.அ. பழனியப்பன் முன்னிலை வகித்தாா். தொடக்கமாக நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள், பொதுமக்கள் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கையொப்பமிட்டனா்.

தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கல்லூரியில் தொடங்கி முக்கிய வீதிகளில் சென்ற பேரணியில், வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

Advertisement

நிகழ்வில் திருமயம் மண்டல துணை வட்டாட்சியா் தங்கராசு, வருவாய் ஆய்வாளா்கள் பாண்டி, முருகேசன், சரவணன், ஈஸ்வரி, புவனேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் பாண்டியன், பாா்த்திபன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.