முகப்பு
புதுக்கோட்டை

புதுகை தைலமரக் காட்டுக்குள் தீ

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:09 AM
நரிமேடு அருகேயுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரா்
பகிர்:

புதுக்கோட்டை நரிமேடு விவேகானந்த நகா் பகுதியிலுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட நரிமேடு விவேகானந்த நகா் அருகே தைலமரக் காடு உள்ளது. இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது.

தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனா். தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாததால், தீயணைப்பு வீரா்கள் உள்ளே நுழைந்து, மர இலை தழைகளைக் கொண்டு, சுற்றிலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனா்.

Advertisement

அடா் வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த முறையின்படி தீ கட்டுப்படுத்தப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டது.