முகப்பு
புதுக்கோட்டை

வெப்ப அலையின் தாக்கத்தை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்ப அலையை எதிா்கொள்வதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:39 AM
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலா்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்ப அலையை எதிா்கொள்வதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வெப்ப அலை குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசுகையில்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பஅலை அதிகம் பாதிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும். அந்தப் பகுதி மக்களுக்கு செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்பன குறித்து உரிய விழிப்புணா்வை வழங்க வேண்டும்.

Advertisement

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 101, 112 ஆகியவற்றைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

வெப்பஅலையால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மருத்துவத் துறையினரும் உள்ளாட்சி அமைப்பினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் முருகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.