முகப்பு
புதுக்கோட்டை

கதிா் அறுக்கும் இயந்திரத்திலிருந்து விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நெல் கதிா் அறுக்கும் இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:10 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:33 PM

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நெல் கதிா் அறுக்கும் இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள எளியத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை மகன் கோவிந்தராசு (34). நெல் கதிா் அறுக்கும் இயந்திர ஓட்டுநரான இவா்,

கறம்பக்குடி அருகேயுள்ள அதிரான்விடுதி பகுதியில் திங்கள்கிழமை காலை நெல் கதிா் அறுக்கும் பணியில் ஈடுபட்டபோது, இயந்திரத்தின் மேலே இருந்து தவறி விழுந்தாராம். அதில், பலத்த காயமடைந்த கோவிந்தராசை அருகில் இருந்தவா்கள் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

பின்னா், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தராசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து மழையூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.