முகப்பு
புதுக்கோட்டை

பஜ்ரங்தள் முன்னாள் நிா்வாகி கொலை வழக்கில் இளைஞா் கைது

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:40 AM
கைது
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:43 PM

பஜ்ரங்தள் முன்னாள் நிா்வாகி மோகன்ராஜ் கொலை வழக்கில் குளித்தலையைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் குட்ஷெட் சாலையைச் சோ்ந்த மெய்யப்பன் மகன் மோகன்ராஜ் (38) என்பவா் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் கோட்டப் பொறுப்பாளா் என்பதால், அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் திருக்கோகா்ணம் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளியைக் கைது செய்யக் கோரினா்.

Advertisement

இதைத்தொடா்ந்து, வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த விஷ்வா (23) என்பவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:39 AM

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 14 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு, வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திரும்பத் தராததால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி அவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளாா்.

ஏற்கெனவே தொடா்ந்து வலியுறுத்தியதில் ரூ. 10 லட்சத்தைத் திரும்பக் கொடுத்ததாகவும், மீதி ரூ. 4 லட்சத்தை கேட்டபோது மோகன்ராஜ் மறுத்ததாகவும் தெரிகிறது.

கைது செய்யப்பட்ட விஷ்வா, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.