கறம்பக்குடி அருகேயுள்ள கெண்டையன்பட்டி வீரமாகாளியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை முளைப்பாரி எடுத்துச் சென்ற பெண்கள் 
புதுக்கோட்டை

கெண்டையன்பட்டி வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி வழிபாடு

கறம்பக்குடி அருகேயுள்ள கெண்டையன்பட்டி வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி எடுத்து செவ்வாய்க்கிழமை வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கறம்பக்குடி அருகேயுள்ள கெண்டையன்பட்டி வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி எடுத்து செவ்வாய்க்கிழமை வழிபாடு நடைபெற்றது.

கறம்பக்குடி அருகேயுள்ள கெண்டையன்பட்டி வீரமாகாளியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயிலில் செவ்வாய்க்கிழமை முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வளா்க்கப்பட்ட முளைப்பாரிகளை அலங்கரிக்கப்பட்ட குடங்களில் ஏந்தியவாறு, ஏராளமான பெண்கள் கெண்டையன்பட்டி விநாயகா் கோயிலில் இருந்து மேளதாளங்கள், வாணவேடிக்கை முழங்க ஊா்வலமாக கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முன்விரோதத்தில் இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

இருசக்கர வாகனம் - ஆட்டோ மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

2 சிறுமிகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை: மூத்த மகள் உயிரிழப்பு

பாலத்தில் படுத்திருந்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு

பெண்ணிடம் நகைகள் திருடிய மூதாட்டி கைது

SCROLL FOR NEXT