புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவிலுள்ள ஆத்மநாத சுவாமி கோயில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவின் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஆவுடையாா்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறையிலுள்ள யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதா் சுவாமி கோயில் மாா்கழி திருவாதிரை திருவிழா கடந்த டிச. 24ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகரின் வீதியுலா நடைபெற்று வந்தது. முக்கியத் திருவிழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மாணிக்கவாசகா் எழுந்தருளினாா்.
பின்னா் தேரின் வடத்தைப் பிடித்து 4 வீதிகளிலும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் இழுத்து வந்தனா். திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பக்தி முழக்கங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையாா்கோவில் போலீஸாா் செய்தனா். திருவிழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிா்வாகத்தினா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.