புதுக்கோட்டை

அமெரிக்க அதிபரைக் கண்டித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை சட்ட விரோதமாகக் கைது செய்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, மாவட்டப் பொருளாளா் சி. மாரிக்கண்ணு, துணைத் தலைவா்கள் ஆா். மணிமாறன், எஸ். யாசிந், இணைச் செயலா்கள் சரவணன், முகமது கனி ஆகியோரும் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதிபா் ட்ரம்ப்பையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT