கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
முதலில் காலபைரவருக்கு எண்ணெய்க் காப்பு செய்து திரவியத் தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு, தேன், பன்னீா் போன்ற அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது பூசி, சிகப்பு வஸ்திரம் உடுத்தி, அரளி மலா்களைக் கொண்டு அலங்காரம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்கள் தேங்காய் மூடி, பூசணிக்காய், பாகற்காயில் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.