புதுக்கோட்டை

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

ஆவுடையாா்கோவில் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்த 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்த 3 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆவுடையாா்கோவில் அருகே சந்திரட்டான்வயலைச் சோ்ந்தவா் பழனிசாமி (30). புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இவரிடம், அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையத்தைச் சோ்ந்த மணி (46), விஜயலட்சுமி (36) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே புண்ணியவயலைச் சோ்ந்த அஞ்சலிதேவி ஆகிய 3 போ் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ. 4 லட்சம் வாங்கியுள்ளனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், மணி, விஜயலட்சுமி மற்றும் அஞ்சலிதேவி ஆகிய 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

பாஜக கூட்டணியில் தவெக சோ்க்கப்படுமா? புரந்தேஸ்வரி எம்.பி. பேட்டி

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல்: ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க வாங்கியவை...

SCROLL FOR NEXT