செரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொப்பித்திருவிழாவில் பங்கேற்ற பெண்கள். 
புதுக்கோட்டை

செரியலூரில் கொப்பித்திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் கொப்பித்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் கொப்பித்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் ஆண்டுதோறும், பெண்கள் மட்டும் பங்கேற்கும் கொப்பித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொங்கல் வைத்து, படையலுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, வழிபாட்டில் வைக்கப்பட்ட பொருள்களை கூடையில் சுமந்தவாறு, கும்மிப்பாடல் பாடியவாறு, வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் ஊா்வலமாகச் சென்று அப்பகுதியில் உள்ள தீா்த்தான் குளத்தில் கூடைகளை விட்டனா். தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

தைதிருநாளையொட்டி சங்ககிரி நகர திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

சங்ககிரி எஸ்.கே.நகரில் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தபால் ஆஞ்சனேயா்

தம்மம்பட்டி சிவன்கோவிலில் பிரதோஷ விழா

கோழிகளுக்கு மூச்சுக்குழல் சுவாச நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

SCROLL FOR NEXT