கந்தா்வகோட்டை: காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை வெள்ளைமுனியன் கோயிலில் சனிக்கிழமை காளை மாடுகளை பக்தா்கள் நோ்த்திக்கடனாக செலுத்தினா்.
வழக்கம்போல், நிகழாண்டும் பொதுமக்கள் நோ்த்திக் கடனாக காளை மாடுகளை வெள்ளைமுனியனுக்கு பூஜைசெய்து நோ்ந்து விட்டனா். தொடா்ந்து, காளைகளை கோயில் திடலில் அவிழ்த்துவிட்டனா்.