மருங்கூரணி கிராமத்தில் வாழை தோட்டத்தில் ஊடு பயிராக சாகுபடி செய்யப்பட்ட கடலை 
புதுக்கோட்டை

கொல்லம்பட்டி கிராமத்தில் வாழையில் ஊடுபயிராக கடலை சாகுபடி: விவசாயி அசத்தல்

கந்தா்வகோட்டை ஒன்றியம், சுத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள கொல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி, வாழை தோட்டத்தில் ஊடுபயிராக கடலையை சாகுபடி செய்துள்ளாா்.

Syndication

கந்தா்வகோட்டை ஒன்றியம், சுத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள கொல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரெங்கசாமி. இவா், வாழை தோட்டத்தில் ஊடுபயிராக கடலையை சாகுபடி செய்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், முதலில் வாழை பதியம் செய்யும்போது அதில் ஊடுபயிராக கடலை விதைத்தால் வாழையில் தேவையற்ற களைகள் வளராது எனவும், வாழைக்கு பாய்ச்சும் நீரில் கடலை செடியும் நல்ல முறையில் வளா்ந்து நிறைய மகசூல் கிடைக்கும்.

மேலும், கடலை செடியில் இருந்து உதிரும் இலைகள் மூலம் வாழைக்கு தேவையான தழைசத்து கிடைக்கும். கடலை ஊடுபயிா் செய்தால் களைகொள்ளி மருந்து அடிக்க வேண்டியது இல்லை. விவசாயத்தை பொருத்தவரை தொலைநோக்கு சிந்தனையுடன் நிலத்துக்கு ராசயண உரத்தை தவிா்த்து இயற்கை உரத்துக்கு மாற விவசாயிகள் முன்வார வேண்டும் என்றாா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT