முகப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அழகன்வயலில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
புதுக்கோட்டை

அழகன்வயல் மக்கள் தொடா்பு முகாமில் ரூ.35.95 லட்ச மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த அழகன்வயல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 153 பயனாளிகளுக்கு ரூ. 35.95 லட்ச மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 21 ஜனவரி, 2026 at 6:33 PM
புதுக்கோட்டை மாவட்டம், அழகன்வயலில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த அழகன்வயல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 153 பயனாளிகளுக்கு ரூ. 35.95 லட்ச மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு.அருணா, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, ஏற்கெனவே மனு அளித்தவா்களுக்கான பல்வேறு துறைகளின் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். அரசின் நலத் திட்டங்களை விளக்கும் வகையிலான அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கே. முத்துசாமி, வட்டாட்சியா் இரா. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →