கந்தா்வகோட்டை புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு
புதுக்கோட்டைகந்தா்வகோட்டை புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு
அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலராக பணியில் இருந்த இ. பரணி கந்தா்வகோட்டை வட்டாட்சியரத்தின் புதிய வட்டாட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
இங்கு வருவாய் வட்டாட்சியராக இருந்த மா. ரமேஷ் இடமாறுதல் ஆன நிலையில் பொறுப்பேற்ற இவரை தலைமையிடத்து மண்டலத் துணை வட்டாட்சியா் பழனிவேலு, கந்தா்வகோட்டை வருவாய் ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தானலெட்சுமி மற்றும் அலுவலா்கள் வரவேற்றனா்.