முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.11.75 லட்சத்துக்கு தீா்வு

ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு கடன் வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டன.

Updated On : 11 மார்ச், 2026 at 10:57 PM
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் முகாமில் பங்கேற்றோா்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு கடன் வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டன.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு சாா்பில் ஓய்வு பெற்ற நீதிபதி நவமூா்த்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஆலங்குடி, புளிச்சங்காடு, வேங்கிடகுளம், எஸ்.குளவாய்ப்பட்டி ஆகிய கனரா வங்கி கிளைகளில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று, திருப்பி செலுத்தாமல் நிலுவையில் உள்ள 500 வழக்குகளுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 20 வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற முகாமில் உடனடி தீா்வு காணப்பட்டன.

முகாமில், கனரா வங்கியின் மண்டல அலுவலா் எஸ்.கே.ஜெயராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு பணியாளா்கள் செந்தில்ராஜா, வினோபா, தேன்மொழி உள்ளிட்டோா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →