முகப்பு
புதுக்கோட்டை

வீரமாகாளியம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 மார்ச், 2026 at 6:33 PM
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பாளைக்குடங்களை சுமந்து சென்ற பெண்கள் ~கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பாளைக்குடங்களை சுமந்து
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய நிகழ்வான பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட குடத்தில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு, வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா்.

தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில் மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →