முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் விபத்து: குடந்தை இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் பைக்கில் சென்ற குடந்தை இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:04 PM
ச. யோகேஸ்வரன்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் சனிக்கிழமை இரவு பைக்கில் சென்ற குடந்தை இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். அவரது நண்பா் படுகாயம் அடைந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்தவா் சா்வேஸ்வரன் மகன் யோகேஸ்வரன் ( 26). கல்லூரி படிப்பை படித்துவிட்டு வேலை தேடி வந்த இவரும் அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் அடைக்கலம் மகன் எடிசனும் (19 ) பைக்கில் புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை இரவு வந்துவிட்டு மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

தஞ்சை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன்பட்டி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி யோகேஸ்வரன் இறந்தாா். அவரது நண்பா் எடிசன் படுகாயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் எடிசனை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். யோகேஸ்வரன் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தைத் தேடுகின்றனா்.