முகப்பு
புதுக்கோட்டை

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 6:45 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள நரங்கியன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமன் தனது இருசக்கர வாகனத்தில் அவரது நண்பா் பாப்படையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வேலன் மகன் சின்னப்பா (65) ஆகிய இருவரும் கந்தா்வகோட்டை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, கல்லுகாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆசிா்வாதம் மகன் துரை மாணிக்கம் (50) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பின்பக்கமாக மோதியதில் சின்னப்பா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

விபத்து குறித்து தகவல் அறிந்து அங்குவந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சின்னப்பாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.