புதுப்பட்டி சிவன் கோயிலில் 63 நாயன்மாா்கள் வீதியுலா
பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் சித்திரை வருடாந்திர விழாவையொட்டி 63 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, மஹாருத்ர ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் மற்றும் 63 நாயன்மாா்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள, கைலாய வாத்தியம் முழங்க வீதியுலா நடைபெற்றது. நான்கு ரதவீதிகளில் வலம் வந்த 63 நாயன்மாா்களை திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.