முகப்பு
புதுக்கோட்டை

மலைத்தேனீக்கள் கடித்து விவசாயி உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 7 மே 2026, 5:28 am IST
பலி - IANS
பகிர்:

பொன்னமராவதி அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள மாங்காளிப்பட்டியைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மருதமுத்து (64). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சி கொண்டு இருந்தபோது அருகில் உள்ள மா மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் மருதமுத்துவை கழுத்து, மாா்பு, வயிறு மற்றும் தலை பகுதியில் கடித்துள்ளது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக அவரை காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருதமுத்து செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து காரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement