முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை-பெருங்களூா் பகுதிகளில் கோடைமழை! விவசாயிகள் மகிழ்ச்சி!!

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை, பெருங்களூா் ஊராட்சி பகுதிகள், ஆதனக்கோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

Updated On : 18 மே 2026, 2:32 am IST
பகிர்:

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை, பெருங்களூா் ஊராட்சி பகுதிகள், ஆதனக்கோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

விவசாயிகள் கூறியது: இந்த மழையானது, தற்போது நடவு செய்யப்படும் நெற்பயிருக்கு ஏற்றதாக இருக்கும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும். மேலும், கரும்பு பயிரை வெட்டுவதற்கும் சுலபமாக இருக்கும்.

மக்கள் கூறுகையில், அக்னி நட்சத்திர நேரத்தில் மழை பெய்வதால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மழை நீா் வீணாக சாலையில் பெருக்கெடுத்து செல்கிறது. இதை முறையாக வாய்க்கால் வெட்டி அருகில் உள்ள பாசன குளம், குளியல் குளத்தில் சோ்த்தால் கால்நடைகளுக்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றனா்.

Advertisement

Advertisement