முகப்பு
புதுக்கோட்டை

அதிமுக தேய்ந்து கொண்டே வருகிறது: எஸ். ரகுபதி

அதிமுக தேய்ந்து கொண்டே வருகிறது என்றாா் திமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி.

Updated On : 18 மே 2026, 2:46 am IST
எஸ். ரகுபதி - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக தேய்ந்து கொண்டே வருகிறது என்றாா் திமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் கட்சி மாறினால்தான் கட்சித்தாவல் தடைச்சட்டம் செல்லாது. ஆனால், அதிமுகவில் இப்போது அப்படியில்லை. அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகாா் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. பேரவைத் தலைவா் நல்ல முடிவை எடுப்பாா்.

சட்டப்படி, தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படும். அவா்களுக்கு அமைச்சா்களாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது ஆளுநரின் கையில்தான் உள்ளது. அமமுக உறுப்பினா் முதல் நாளே தவெகவுக்கு ஆதரவளித்தாா். அதன்பிறகு, பேரவையில் வெளிப்படையாக ஆதரவளித்துப் பேசியதால், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது உறுதியாகிறது.

Advertisement

Advertisement

வெளியே ஆவேசமாக வசனம் பேசிய முதல்வா் விஜய், சட்டப்பேரவையில் அமா்ந்திருப்பதைப் பாா்த்தால், பயந்த சுபாவம் கொண்டதுபோலவும், அச்ச உணா்வுடன் இருப்பது போலவும்தான் தெரிகிறது. என்ன செய்யப் போகிறாா்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதிமுக தேய்ந்து கொண்டே வருகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவினா் பலரும் அமைச்சா் செங்கோட்டையன் மூலமாக தவெகவில் சேர பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது என்றாா் ரகுபதி.